search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சட்டசபை கூட்டத்தொடர்"

    சட்டசபை கூட்டத் தொடர் இன்று தொடங்கி உள்ள நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக பேரவையில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர திமுக சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. #TNAssembly #DMK
    சென்னை:

    தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டம் முடிந்த நிலையில், மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடத்தி அந்தந்த துறைக்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்வதற்காக தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடியது.

    காலை 10 மணிக்கு அவை கூடியதும், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் செ.மாதவன், கே.கே.ஜி.முத்தையா, சா.கணேசன், பி.அப்பாவு, ஆர்.சாமி, ஜெ.குரு என்கிற குருநாதன், பூபதி மாரியப்பன் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதன்பின்னர் கேள்வி நேரம் தொடங்கியது. உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட்டது.



    இதற்கிடையே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக பேரவையில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர திமுக சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவை விதி 56-ன் படி ஸ்டெர்லைட் விவகாரம், துப்பாக்கிச்சூடு ஆகியவற்றை பற்றி நாள் முழுவதும் விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மானம் கோரி  ஸ்டாலின் நோட்டீஸ் கொடுத்தார்.

    ஸ்டெர்லைட் விவகாரம் மற்றும் அது தொடர்பான போராட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட பிரச்சினைகளால் தமிழக சட்டப்பேரவையில் இன்று அமளி ஏற்படலாம் என்பதால், தலைமைசெயலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. #TNAssembly #DMK
    சட்டசபை கூட்டத்தொடர் 29-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், அதற்கு முந்தைய நாள் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது. #TNAssembly #DMKMLAs
    சென்னை:

    தமிழக சட்டசபையில் பட்ஜெட் கடந்த மார்ச் 15-ந்தேதி தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் மீதான விவாதத்திற்குப் பிறகு சபை ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் துறை வாரியான மானியக் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக வருகிற 29-ந் தேதி சட்டசபை மீண்டும் கூடுகிறது. அப்போது, துறை வாரியாக நிதி ஒதுக்குவதற்கு மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும்.



    இந்த கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது பற்றி விவாதிக்க அலுவல் ஆய்வு குழு கூட்டம் சபாநாயகர் தனபால் தலைமையில் நேற்று நடந்தது. இதில், மே 29-ந் தேதி முதல் ஜூலை 9-ந் தேதி வரை கூட்டத்தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டது.

    இந்நிலையில், மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 28 ஆம் தேதி திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது. அண்ணா அறிவாலயத்தில் 28 ஆம் தேதி மாலை 5 மணிக்கு இந்த கூட்டம் நடைபெறுகிறது. இதில் திமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என கொறடா சக்கரபாணி அழைப்பு விடுத்துள்ளார்.

    இந்த கூட்டத்தில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் தி.மு.க. சார்பில் முன்வைக்க வேண்டிய கருத்துக்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு முடிவு செய்யப்படும்.

    தமிழகம் சந்தித்து வரும் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக இந்த கூட்டத் தொடரில் தி.மு.க. பிரச்சனை எழுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. #TNAssembly #DMKMLAs

    அரசு துறைகளுக்கு மானிய கோரிக்கைகளை ஒதுக்குவதற்காக தமிழக அரசின் சட்டசபை கூட்டத்தொடர் ஜூன் 18-ந் தேதி தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. #TNAssembly
    சென்னை

    அரசு துறைகளுக்கு மானிய கோரிக்கைகளை ஒதுக்குவதற்காக தமிழக அரசின் சட்டசபை கூட்டத்தொடர் ஜூன் 18-ந் தேதி தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) கடந்த மார்ச் மாதம் 15-ந் தேதியன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் பட்ஜெட் மீதான விவாதம் மார்ச் 19-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை நடைபெற்றது. 22-ந் தேதியன்று எம்.எல்.ஏ.க்களின் விவாதத்துக்கு நிதித்துறை அமைச்சரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பதிலுரை வழங்கினார். அதைத் தொடர்ந்து சட்டசபையின் நிகழ்ச்சிகள், தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டது.

    சட்டசபையில் பட்ஜெட் நிறைவேறிய பின்பு, அரசின் ஒவ்வொரு துறைகளும் அவற்றின் திட்டங்களை நிறைவேற்றுவதற்காக தேவையான நிதியைப் பெறவேண்டும். இதற்கு சட்டசபையில் விவாதிக்கப்பட்டு, அவையின் ஒப்புதல் பெறப்பட வேண்டும்.

    அதற்காக துறை வாரியான நிதி ஒதுக்கம் தொடர்பான மானிய கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட வேண்டும். எனவே சட்டசபை மீண்டும் கூட்டப்பட வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. இந்த கூட்டத்தொடர் சுமார் ஒரு மாதம் வரை நீடிக்க வாய்ப்புள்ளது.

    அரசு துறைகளின் மானிய கோரிக்கைகளுக்கான சட்டசபை கூட்டத்தொடரை வரும் ஜூன் மூன்றாவது வாரத்தில் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக சட்டசபை வட்டாரம் தெரிவித்தது. ஜூன் 18-ந் தேதியன்று சட்டசபை கூட்டத்தொடர் தொடங்க அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. #TNAssembly
    ×